×

பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச படம் அனுப்பிய இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (28), திருவள்ளூரைச் சேர்ந்த குகன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத 2 பேர் மெசேஜ் அனுப்பி இளம் பெண்ணுடன் பேசி பழகி நண்பர்கள் ஆனார்கள். இளம் பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்களையும், ஆபாச குறுந்தகவலையும் இளைஞர்கள் 2 பேர் அனுப்பியுள்ளனர். இளம் பெண் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,LOKESH ,MAULIWAKKAM ,CHENNAI ,KUGAN ,THIRUVALLUR ,INSTAGRAM ,
× RELATED பாசிசவாதிகளை விரட்ட வேண்டும்