×

குழந்தைகள் நல உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

 

திருப்பூர், பிப்.20: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதி முறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

இது அரசு பணி அல்ல. விண்ணப்பங்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது, சட்டம், சமூக பணி, சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம், கல்வி, மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். 3 ஆண்டுகள் பதவி காலம் ஆகும். இதற்கான விண்ணப்பத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் 7வது தளம், அறை எண் 705ல் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post குழந்தைகள் நல உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,District ,Collector ,Kristaraj ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!