×

மதுரை வில்லாபுரத்தில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்

அவனியாபுரம், பிப். 20: மதுரை மாநகராட்சி மண்டலம் 4க்கு உட்பட்ட வார்டு எண் 84, 86, 90, 91 ஆகிய நான்கு வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்தும், சம்பளத்தை உடனே வழங்க கோரியும் விசிக துப்புரவு சங்க தொழிலாளர் நிர்வாகி பூமிநாதன், டிபிஐ முத்து, நெடுஞ்செழியன் மற்றும் 100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று வில்லாபுரம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், எஸ்ஐ மணிராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தூய்மை பணியாளர் சாலை மறியலை கைவிட்டு, தொடர்ந்து சாலையோரம் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் ஒப்பந்த நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தி மதியம் 12 மணிக்குள் சம்பளம் வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post மதுரை வில்லாபுரத்தில் தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Madurai Villapuram ,Avaniyapuram ,Madurai Corporation ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்து சென்றதால்