×

ஒன்றிய பாஜ அரசின் அடக்குமுறை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்லாவரம்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஒன்றிய பாஜ அரசின் அடக்கு முறையை கண்டித்தும் பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் வேல் முருகன் தலைமை தாங்கினார். இதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஒன்றிய அரசிற்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு விவசாயிகள் மீது பதிவு செய்த வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகள் மீதான தாக்குதலை நிறுத்தவும், உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

The post ஒன்றிய பாஜ அரசின் அடக்குமுறை கண்டித்து விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Pallavaram ,Delhi ,Communist Party ,Communist Party of India ,Farmers' Union ,South Chennai ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்