×

கண்ணூர் அருகே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக எஸ்எப்ஐ கருப்புக்கொடி: காரிலிருந்து இறங்கியதால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழகங்களில் பாஜ, ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களை முக்கிய பணிகளில் நியமிப்பதாக கூறி கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கு எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ போராட்டம் நடத்தி வருகிறது. கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த அமைப்பினர் அவருக்கு கருப்புக் கொடி காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் கவர்னர் நேற்று கண்ணூர் அருகே உள்ள மட்டனூர் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வழியில் எஸ்எப்ஐ அமைப்பினர் அவருக்கு கருப்புக் கொடி காண்பித்தனர். அதைப் பார்த்தவுடன் காரை உடனடியாக அங்கு நிறுத்துமாறு கவர்னர் கூறினார். கார் நின்றவுடன் அதிலிருந்து இறங்கி ரோட்டுக்கு வந்த அவர், போராட்டம் நடத்திய மாணவர்களைப் பார்த்து, தைரியம் இருந்தால் தனக்கு அருகே வருமாறு ஆவேசத்துடன் கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காரில் ஏறுமாறு போலீசார் கூறியும் அவர் தொடர்ந்து போராட்டக்காரர்களை பார்த்து ஆவேசத்துடன் பேசினார். உடனடியாக போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் பிறகே கவர்னர் ஆரிப் முகம்மது கான் அங்கிருந்து காரில் ஏறிச் சென்றார்.

The post கண்ணூர் அருகே கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக எஸ்எப்ஐ கருப்புக்கொடி: காரிலிருந்து இறங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : SSI ,Governor Aarif Mohammed Khan ,Kannur ,Thiruvananthapuram ,Marxist Communist Party ,Bahja ,RSS ,Kerala ,Governor ,Aarif Mohammed Khan ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...