×

உரிமைகள் மீட்பு பொதுக்கூட்டங்கள் முதல்வர் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நாற்பதும் நமதே, நாடும் நமதே என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டங்கள். வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்ட செயலாளர்கள், கழக முன்னணியினர் என அனைவருக்கும் பாராட்டுகள், நன்றி. 2024 தேர்தலில் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம். இந்தியா-வை வெற்றி பெறச் செய்வோம்.

The post உரிமைகள் மீட்பு பொதுக்கூட்டங்கள் முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : CM ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Stalin ,Tamil Nadu ,
× RELATED விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ...