×

கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், பீன்ஸ், முருங்கை விலை ரூ.30 வரை உயர்வு: எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று ஒருசில காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் பீன்ஸ் கிலோ ரூ.30ல் இருந்து 50க்கும், கேரட் ரூ.20லிருந்து 80க்கும், முருங்கைக்காய் ரூ.50லிருந்து 80க்கும், எலுமிச்சை கிலோ ரூ.100க்கும் விற்பனை ஆனது. ஒரு கிலோ தக்காளி ரூ.25, பெரிய வெங்காயம் ரூ.24, சின்ன வெங்காயம் ரூ.40, உருளைகிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.60, சவ்சவ் ரூ.16, முள்ளங்கி ரூ.13, முட்டைகோஸ் ரூ.22, வெண்டைக்காய் ரூ.35, கத்தரிக்காய் ரூ.35, கொத்தவரங்காய் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘‘வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் எலுமிச்சையும், வரத்து குறைவால் பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் விலைஉயர்ந்துள்ளன. மற்ற காய்கறிகளின் விலை வழக்கம்போல் உள்ளது. விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தால் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவி வருகிறது. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்’’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட், பீன்ஸ், முருங்கை விலை ரூ.30 வரை உயர்வு: எலுமிச்சை கிலோ ரூ.100க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,Koyambedu market ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...