×

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிப்பு: அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நடிகர் கமலஹாசன், கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 18 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை 8 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: நான் ‘தக் லைப்’ பட முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அமெரிக்காவில் பணிகளை முடித்துவிட்டு இப்போது சென்னை திரும்பி இருக்கிறேன். இன்னும் 2 தினங்களில் நல்ல செய்திகளுடன் நான் உங்களை சந்திக்கிறேன். இப்போதைக்கு இதுதான் செய்தி. ஏனென்றால் நான் அமெரிக்காவில் இருந்து செய்திகளை கொண்டு வரவில்லை. இங்கிருந்துதான் உருவாக்க வேண்டும். நான் இங்கு கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு, அடுத்த 2 நாட்களில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அப்போது எல்லா தகவல்களையும் கூறுகிறேன். எங்கள் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை குறித்தும், 2 நாட்களில் கூறுவேன். இப்போது எதுவும் நான் கூறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி 2 நாட்களில் அறிவிப்பு: அமெரிக்காவில் இருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Parliamentary Election Alliance ,Kamal Haasan ,America ,Chennai ,People's Justice Center ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...