- Vijayatharani
- பாஜக
- தமிழ்நாடு காங்கிரஸ்
- செல்வப்பெருந்தக்காய்
- சென்னை
- செல்வாப்பேருந்தகை
- சட்டமன்ற உறுப்பினர்
- தில்லி
- தின மலர்
சென்னை: பாஜ வீசும் வலையில் விஜயதாரணி எம்எல்ஏ சிக்க மாட்டார் என்று செல்வ பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, பாஜவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதனால், அவர் கடந்த 12ம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை எம்எல்ஏ அளித்த பேட்டி:
தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பேரிடர், கொரோனா என பல கட்டங்களை கடந்து பல புதிய திட்டங்களால் அரசு தமிழகத்தை உயர்த்தி வருகிறது. இந்த பட்ஜெட் சிறப்பானது. பாஜவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய் தான் கூறுவார்கள். ஒன்றிய அரசின் வீடு வசதி திட்டம் குளறுபடியானது. இதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள். விஜயதாரணி 3 முறை எம்எல்ஏவாக இருந்தவர். வழக்கறிஞர். பாஜ பிள்ளை பிடிக்கும் கட்சி. யார், யார் திறமையாக இருக்கிறார்களோ, யார், யார் விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா என்று வலை வீசுவார்கள். அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர் விஜய தாரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி. ஒரு வழக்கு சம்பந்தமாக, டெல்லி போய் இருக்கிறார். உடனே பாஜ தலைவர்கள் அவரை சேர்த்துக்கொள்ளலாமா? என்று துடிக்கிறார்கள். அது நடக்காது. அவருக்கு காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளது. இன்னும் செய்ய தயாராக இருக்கிறது.
The post பாஜ வீசுகின்ற வலையில் விஜயதாரணி சிக்க மாட்டார்: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.