×

இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ.2 லட்சமாக உயர்வு

இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தை மேலும் மேம்படுத்தப்படும். விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். ராமேஸ்வரம், செந்துறை, பெரும்புதூர், அரக்கோணம் ஆகிய அரசு மருத்துவமனைகளிலும் தேனி மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 50 படுக்கைகள் கொண்ட 6 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் 142 ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். அதே ஈரோடு மாவட்டம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டப்படும். மேலும், 87 கோடி ரூபாயில் 25 வட்டம் மற்றும் வட்டம்சாரா மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் 64 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

The post இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ரூ.2 லட்சமாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Innuivir ,Rameswaram ,Sentura ,Perumbudur ,Arakkonam ,
× RELATED செந்துறை அருகே சோளத்தட்டை தீயிட்டு...