×

பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் வில்லங்கச் சான்று விவரங்களை ஆவணதாரருக்கு அனுப்பும் வசதி: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று சென்னை, பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் வில்லங்கச் சான்று விவரங்களை Tiny URL மூலம் ஆவணதாரருக்கு அனுப்பும் வசதியை தொடங்கி வைத்தார். தற்போது பத்திரப்பதிவு முடிவடைந்தவுடன் பொதுமக்கள் பதிவுத்துறையின் இணையதளத்தில் சென்று எந்த விதமான கட்டணமுமின்றி வில்லங்கசான்று விபரங்களை தரவிறக்கம் செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.

இணையதளத்தில் சென்று வில்லங்கச்சான்று விபரங்களை பார்வையிடும் வசதியை மேலும் எளிதாக்கும் வண்ணம், ஒரு பத்திரப்பதிவு நிறைவடைந்த மறுநாள் சொத்து உரிமையாளரின் கைபேசிக்கு ஆவணத்தைப்பொறுத்த தற்போதைய வில்லங்கச் சான்று விபரங்களை எவ்வித கட்டணமுமின்றி Tiny URL ஆக குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம், பத்திரப்பதிவு நிறைவடைந்த மறுநாள், Tiny URL உடன் கூடிய குறுஞ்செய்தி பொதுமக்களின் கைபேசி எண்ணுக்கு அனுப்பிவைக்கப்படும். அதை கிளிக் செய்த பின்னர் ஆவணத்தைப் பொறுத்த வில்லங்கச் சான்றினை பிடிஎப் வடிவில் கைபேசியிலேயே தரவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளலாம். இவ்வாறான வில்லங்கங்சான்று விபரங்கள் 30 நாட்கள் வரையில் தரவிறக்கம் செய்து கொள்ளும் வண்ணம் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

The post பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் வில்லங்கச் சான்று விவரங்களை ஆவணதாரருக்கு அனுப்பும் வசதி: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Murthy ,CHENNAI ,P. Murthy ,Office ,Periyamedu ,
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...