×

பிரபா ஒயின்ஷாப் ஓனரா கடையை எப்ப திறப்பீங்க: வடிவேலு பட பாணியில் திருட வந்து மட்டையான கொள்ளையன் சிக்கினார்

நாகர்கோவில்: ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேல் ஒரு மதுக்டைக்கு திருட சென்றபோது, அது தெரியாமல் கடை உரிமையாளர் பூட்டி விட்டு சென்று விடுவார். இதனால் வடிவேலு கடையின் உரிமையாளருக்கு போன் செய்து ஹலோ…. பிரபா ஒயின்ஷாப் ஓனரா… கடையை எப்போ சார் திறப்பீங்க என்று கேட்பார். உரிமையாளர் வந்து கடையை திறந்ததும் பணத்துடன் தப்பி விடுவார். இதே பாணியில் கன்னியாகுமரியில் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளை பகுதியில் டாஸ்மாக் கடையில் நேற்று காலை 7 மணியளவில் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் பாதி திறந்து இருந்தது. இதுகுறித்து கடையின் சூப்பர் வைசர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு கடையின் முன்பு காத்திருந்தனர். அப்போது திடீரென ஷட்டர் திறக்கப்பட்டு உள்ளே இருந்து கையில் பேக்குடன் வாலிபர் ஒருவர் வேகமாக ஓடினார். அவரை பிடித்த போலீசார், வாலிபர் வைத்திருந்த பேக்கை சோதனை செய்ததில், 2 புல் பாட்டிலும், 2 குவார்ட்டர் பாட்டிலும் இருந்தது. கடையில் இருந்த சில்லறை காசுகள் ரூ.2,060 திருடப்பட்டு இருந்தது. விசாரணையில் அவர், குமரி மாவட்டம் எட்டணி பகுதியை சேர்ந்த விச்சு என்பதும், டாஸ்மாக் கடைக்குள் திருட வந்தவர், மது அருந்தி மட்டையாகி காலையில் கடை திறந்ததும் தப்ப முயன்றதும் தெரியவந்தது.

The post பிரபா ஒயின்ஷாப் ஓனரா கடையை எப்ப திறப்பீங்க: வடிவேலு பட பாணியில் திருட வந்து மட்டையான கொள்ளையன் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Prabha Wineshop ,Onara Store ,Vadivelu ,Nagercoil ,Vadivel ,
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...