×

பாஜவில சேர்ந்துட்டாரு… ஆனா அதிமுகவில விளம்பரம்: மாஜி எம்எல்ஏவுக்கு ஒரே கன்பியூசன்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் வடக்கு மெயின் ரோடு சாலையில், பள்ளிப்படை அருகே உள்ள பாலத்தில், வரும் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இதில், சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி பாஜ கட்சியில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ அருள் பெயர் இடம்பெற்றுள்ளது. அதிமுக சுவர் விளம்பரத்தில் பாஜ கட்சியில் இணைந்த நபரின் பெயரை எழுதி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் இவற்றை பார்த்து விட்டு, பெயரளவில் தான் பாஜவுக்கு மாறி உள்ளார். ஆனால் அவர் இன்னும் அதிமுகவில் தான் உள்ளார் என கமெண்ட் அடித்து விட்டு செல்கின்றனர்.

The post பாஜவில சேர்ந்துட்டாரு… ஆனா அதிமுகவில விளம்பரம்: மாஜி எம்எல்ஏவுக்கு ஒரே கன்பியூசன் appeared first on Dinakaran.

Tags : BJP ,AIADMK ,MLA ,Chidambaram ,Cuddalore ,Pallipappa ,Jayalalithaa ,
× RELATED அண்ணாமலை சிறைபிடிப்பு: அதிமுக...