×

அதானி குறித்து பதில் அளிக்காத கோழை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: ஆ.ராசா கடும் விமர்சனம் பொய் மோசடி வஞ்சகம் இதுதான் மோடி

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், என்ற தலைப்பில் கரூர் நாடாளுமன்ற தொகுதி பரப்புரைக்கூட்டம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடை பெற்றது. இதில் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது: இந்த மாவட்டத்தின் செயலாளர் செந்தில்பாலாஜி, ஒரு பொய் வழக்கு காரணமாக இப்போது இங்கு இல்லை. அவர் விரைவில் வெளியே வருவார். அவர்களின் முகத்திரையை கிழிப்பார். எந்த ஒரு பிரதமரும் நாடாளுமன்றம் நடைபெறும் போது, வெளிநாடு செல்லக்கூடாது என்ற மரபு உள்ளது. ஆனால், இந்த மோடி அப்படியில்லை. நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் கூட வராதவர்தான் இந்த மோடி. இவர்களிடம் உண்மை, சத்தியம் இல்லை. ஜனநாயக நாட்டில் புகார் தெரிவித்தால் பதில் அளிக்க வேண்டும்.

அதானி மீது பங்க்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டியதாக ஊழல் முறைகேடு தொடர்பாக ஹிண்டர்பார்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதானி ஊழல் முறைகேடு குறித்து கேட்டால் மோடி அமைதி காக்கிறார். பதில் தருவதில்லை. அவர் ஒரு கோழை, மீண்டும் கோழையை ஆட்சிக்கு வர விடக்கூடாது. தேர்தல் பத்திரம் மூலம் ரூ.6500 கோடி பாஜ பெற்றுள்ளது. அதில் அதானி ரூ.500 கோடி அல்லது 1000 கோடி வழங்கியிருந்தால் அது லஞ்சப்பணம்தானே. 2 ஜி வழக்கில் ரூ.1லட்சத்து 26 ஆயிரம் கோடி சம்பந்தமாக அண்ணாமலை 6வது டேப் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். அவர் 60வது டேப் வேண்டுமானாலும் வெளியிடட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன். பொய், மோசடி, வஞ்சகம் இதுதான் மோடி. மோடியை எதிர்க்க வடஇந்திய தலைவர்கள் அஞ்சுகின்றனர். தமிழ்நாடு முதல்வர்தான் அவரை எதிர்க்கிறார். மோடியை வீழ்த்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

* மோடிக்கு நோ ஓட்டு எடப்பாடி சொல்வாரா?

‘எந்த தேசிய கட்சியுடனும் கூட்டணி இல்லை, ஆனால் இந்தியாவை காப்பாற்றுவோம் என எடப்பாடி கூறுகிறார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது, ஒரு வேலை இந்த தேர்தலில் அதிமுக ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றால், மோடிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என கூறும் துணிச்சல் அவருக்கு உண்டா’ என்று ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.

The post அதானி குறித்து பதில் அளிக்காத கோழை மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: ஆ.ராசா கடும் விமர்சனம் பொய் மோசடி வஞ்சகம் இதுதான் மோடி appeared first on Dinakaran.

Tags : Adani ,A. Raza ,Modi ,Karur Parliamentary Constituency ,Stalin ,Karur Tiruvalluvar Maidan ,DMK ,deputy general secretary ,Nilgiris ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...