×

திருத்தணியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காதவர் கைது

திருத்தணி: திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமைய்யா மனைவி பிரேமா(52). இவரிடம் திருத்தணி சுப்ரமணியநகர், கம்பர் தெருவைச் சேர்ந்த முருகேசன்(48) என்பவர் கடந்த, 2018ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி, 640 சதுரடி வீட்டுமனை பத்திரம் அடகு வைத்து, ரூ.1.42 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி முருகேசன், வாங்கிய கடனில், ரூ.50 ஆயிரம் பிரேமாவிடம் கொடுத்துவிட்டு அசல் பத்திரத்தை திருப்பி பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், மீதமுள்ள பணத்தை 3 மாதத்திற்குள் திரும்பி தருவதாக முருகேசன் உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரேமா பலமுறை முருகேசனிடம் மீதி பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்க மறுத்துள்ளார். இது குறித்து பிரேமா முருகேசன் மீது திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து நேற்று முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருத்தணியில் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காதவர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Ramaiah ,Prema ,Ramakrishnapuram ,Murugesan ,Kambar Street, Tiruthani Subramanianagar ,Tiruthani ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!