×

சாலை விபத்தில் மூளைச்சாவு உறுப்புதானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: கோட்டாட்சியர் பங்கேற்பு

திருவள்ளூர்: உடல் உறுப்பு தானம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அவர்கள் உயிரிழந்த பிறகு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே இந்த உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், சத்தரை கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் பிரபாகரன்(33) நேற்று முன்தினம் 18ம் தேதி அன்று சாலை விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மூளைச் சாவு அடைந்தார். இதனையடுத்து உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

இந்நிலையில் உடல் உறுப்புதானம் செய்த பிரபாகரன் உடலுக்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் ஆ.கற்பகம் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பிரபாகரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் பொது மக்கள், உறவினர்கள் உடனிருந்தனர்.

The post சாலை விபத்தில் மூளைச்சாவு உறுப்புதானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: கோட்டாட்சியர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,India ,Tamil Nadu ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...