×

கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


ஆவடி: கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார். ஆவடி காந்திநகர் பகுதியை சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கணவரை பிரிந்த அப்பெண் கருத்து வேறுபாடுகளால் 8 வருடமாக மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், இவர்கள் வசிக்கும் அதே வீட்டின் மேல் தளத்தில் குடியிருப்பவர் சுஜித்(38). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இவர், சிறுமிக்கு கடந்த ஒரு வருடமாக பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன் சுஜித் பெங்களூரில் வேலை கிடைத்ததால் குடும்பத்துடன் காலி செய்து, பெங்களூர் சென்று விட்டார். இதை அறிந்த சிறுமி நடந்ததை இவரது தாயாரிடம் கூறினார்.

உடனே, சிறுமியின் தாயார் கடந்த ஜனவரி 5ம் தேதி அளித்த புகாரின் அடிப்படையில், சுஜித் மற்றும் அவரது தந்தை சுதாகர் மீது ஆவடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவந்தனர். இந்நிலையில், சுஜித்தை நேற்றுமுன்தினம் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவரது தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Avadi Gandhinagar ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!