×

4 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,015 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார்

புழல்:4 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,015 மாணவ, மாணவிகளுக்கு சுதர்சனம் எம்எல்ஏ விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் 360 மாணவிகள், சோழவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 94 மாணவர்கள், பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 381 மாணவ மாணவிகள், அலமாதி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 180 மாணவ மாணவிகள் என மொத்தம் 1,015 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை அந்தந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சோழவரம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் கருணாகரன், செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணை தலைவர் நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் செங்குன்றம் அமுதா, சோழவரம் லீலாவதி, பாடியநல்லூர் லலிதா, அலமாதி பத்மஜா, அலமாதி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன், சோழவரம் ஒன்றிய கவுன்சிலர் சுகவேனி முருகன், மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள்,

சோழவரம் சிவா, அலமாதி கீதா ராமன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் மேல்நிலைத்தேக்க தொட்டி ஆகியவற்றை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

The post 4 அரசு பள்ளிகளை சேர்ந்த 1,015 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Puzhal ,Sudarshanam ,Senggunram Government Girls Higher Secondary School ,Cholavaram Government Boys Higher Secondary School ,Padiyanallur Govt ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு