×

தாமரைப்பாக்கம் பகுதியில் அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் நிறுவ வேண்டும்: பயணிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின்போது அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் நிறுவ வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். தாமரைப்பாக்கத்தை சுற்றி புன்னப்பாக்கம், பாகல்மேடு, மாகரல் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலை சம்பந்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கூட்டுச்சாலை பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தம் வந்து, அங்கிருந்து பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து மூலம் செல்வார்கள்.

அவ்வாறு செல்லும் பயணிகடள நிழற்குடை இல்லாமல் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் வாடியும், கொட்டும் மழையிலும் நனைந்தும் அவதிப்பட்டு வந்தனர். எனவே தாமரைப்பாக்கம் பகுதியில் பயணிகளின் வசதிக்காக பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதன்படி தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் புறக்காவல் நிலையம் அருகில் புதியதாக ரூ.5 லட்சம் செலவில் நவீன பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. அந்த நிழற்குடையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தது, அப்போது அந்த நவீன நிழற்குடையை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். எனவே அந்த நிழற்குடையை மீண்டும் நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தாமரைப்பாக்கம் பகுதியில் அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் நிறுவ வேண்டும்: பயணிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamaripakkam ,Uthukkottai ,Thamaraipakkam ,Periyapalayam ,Punnapakkam ,Bagalmedu ,Magaral ,Tamaraipakkam ,Nizhalkudai ,
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...