×

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் சர்வர் பழுது காரணமாக மீண்டும் விண்ணப்பிக்கலாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

திருவள்ளுர்: தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் சர்வர் பழுது காரணமாக மீண்டும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தொடர்பான 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாாியங்களில் பதிவு, பதிவை புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்கள் போன்ற விண்ணப்பங்கள் www.tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணையத்தளம் வாயிலாக பெறப்படுகிறது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாாியம், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் 18 அமைப்புசாரா நல வாாியங்களின் இணையதள சர்வர் பழுதின் காரணமாக, இழப்பு ஏற்பட்ட ஆவணங்களை மீண்டும் இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்ய ஏதுவாக எண்.58/88 சித்திவிநாயகர் கோயில் தெரு, பொியக்குப்பம், திருவள்ளூர் – 602001 என்ற முகவரியில் இயங்கி வரும் திருவள்ளுர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, தெளிவுரைக்காக மனுதாரர்களுக்கு திருப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் 2.12.2023க்கு முன்பாக விண்ணப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களுக்குாிய ஆவணங்களை தொழிலாளா்கள் சிறப்பு உதவி மையத்தில் நோில் சமர்ப்பித்து வாரிய இணையதளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று திருவள்ளுர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) என்.கே.தனபாலன் தொிவித்துள்ளார்.

The post அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் சர்வர் பழுது காரணமாக மீண்டும் விண்ணப்பிக்கலாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Organized ,Labor Welfare Board ,Tiruvallur ,Assistant Commissioner ,Tamil Nadu Construction and Unorganized Labor Welfare Board ,Tiruvallur District ,Assistant Labor Commissioner ,Unorganized Labor Welfare Board ,Labor Commissioner ,Dinakaran ,
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...