×

ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி சுற்று வட்டாரத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்வதற்காக ஓடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வந்த 104 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒடிசாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வோரை கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி என தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தனிப்படையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் மகேந்திரா சிட்டி அருகே சிலர் கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மகேந்திரா சிட்டி சந்திப்பில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இரண்டு நபர்களை விசாரணை செய்தனர். அவர்கள், ஒடிசாவை சேர்ந்த பட்டுகுளோரி (40), அதே பகுதியை சேர்ந்த அக்ரம்பத்ரா (28) என விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் இருவரது உடைமைகளை சோதனை செய்ததில் அதில் ரூ.10 லட்சத்து, 40 ஆயிரம் மதிப்புள்ள 104 கிலோ கஞ்சா இருந்தது.

அவர்கள் அந்த கஞ்சாவினை ஒடிசா மாநிலத்திலிருந்து வாங்கி வந்து தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், கல்லூரி மாணவர்களுக்கும், சில்லறை விற்பனைக்கும் எடுத்துசெல்வதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த கஞ்சாவையும் கைப்பற்றுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி கைப்பற்றப்பட்டது. இது சம்மந்தமாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

The post ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Odisha ,Kuduvanchery ,
× RELATED சில்லி பாயின்ட்…