×

தாய் இறந்த 9ம் நாளில் மகன்கள் திடீர் மாயம் : தந்தையிடம் விசாரணை

கூடுவாஞ்சேரி: குடும்ப தகராறில் தாய் தற்கொலை செய்து கொண்ட 9வது நாளில் மகன்கள் மாயம். தந்தையிடம் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூடுவாஞ்சேரி நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (30). இவர் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் குப்பை அள்ளும் வாகனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ராஜாவுக்கும் அவரது மனைவி மகாலட்சுமிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனம் உடைந்த மகாலட்சுமி கடந்த 9ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த ராஜாவின் மகன்கள் வெற்றிமாறன் (6), சூர்யா (5) காலை 10.30 மணியளவில் திடீரென மாயமானார்கள்.

இதுகுறித்து அவரது உறவினர்கள் பள்ளி குழந்தைகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ சுகன்யா நேற்று வழக்கு பதிவு செய்து ராஜாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மாயமான பள்ளி குழந்தைகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தாய் இறந்த 9ம் நாளில் மகன்கள் திடீர் மாயம் : தந்தையிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Mayam ,Raja ,Nagathamman Kovil Street, Kuduvancheri ,Nandivaram-Kooduvanchery ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மாயம்