×

`உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டம் ஒன்றிய அரசு நமது பண்பாட்டிலும், கல்வியிலும் கை வைத்துவிட்டது: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

காஞ்சிபுரம்: ஒன்றிய பாஜ அரசு பண்பாட்டிலும், கல்வியிலும் கை வைத்து விட்டது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி சார்பில், `உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் பரப்புரை பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் தேரடியில் நேற்று முன்தினம் நடந்தது. தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன், செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலை வகித்தனர்.

மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். இதில் சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எ.வ.வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.பின்னர், அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: காஞ்சிபுரத்தில் அவ்வளவு பேச வேண்டியதில்லை. ஆனால், காஞ்சிபுரம் கற்பூரம் மாதிரி நல்ல கருத்துகளை பற்றிக்கொள்ள கூடியது.

ஒரு நாட்டில் பண்பாடு வளர வேண்டும் என்றால் கல்வி முக்கியம், சமுதாயம் சமமாக வளர வேண்டும் என்றால் கல்வி முக்கியம். பொருளாதாரம் சமமாக முன்னுக்கு வர வேண்டும் என்றால் கல்வி முக்கியம். ஆனால், ஒன்றிய அரசு நமது பண்பாட்டிலும், கல்வியிலும் கை வைத்து விட்டது.கடந்த தேர்தலில் ஒரே செங்கல் வைத்துக்கொண்டு நமது உதயநிதி ஸ்டாலின் உங்களை ஒட்டுமொத்தாக ஒழித்துக் கட்டினார். ஆகவே, இந்த நாடாளுமன்ற தொகுதியில் 40ம் நமதே என்று தாய்மார்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழம், தமிழக முதல்வர் 40 தொகுதிகளும் வெற்றிபெறும் வகையில், நீங்கள் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, அண்ணா பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில் முதன்முதலாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் திமுக கூட்டம் தொடங்கப்பட்டது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: ஒன்றிய பாஜ அரசாங்கத்திற்கு, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக ஓர் கண்டன தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படபோவதும் இல்லை, நடக்கவும் நடக்காது. மக்கள் தொகையின் அடிப்படையில் தான் நாடாளுமன்ற தொகுதிகளை கணக்கெடுத்து பிரிக்க போகிறோம் என்றால் தற்போது தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுகளில் 8 தொகுதிகள் குறைந்து 31 நாடாளுமன்ற தொகுதிகளாக மாறிவிடும்.

நமது அண்டை மாநிலமான கேரளா, கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலும் நாடாளுமன்ற தொகுதிகள் குறைகிறது. நாடாளுமன்றத்தில் உரிமைக்கு போராட முடியாத சூழலைத்தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் உருவாக்குகிறது. ஆகையால், இதனை திமுக எதிர்கிறது. மோடி அலை எல்லாம் வீசவில்லை, எல்லாமே விளம்பரம் தான், மோடி பிரதமாக பதவியேற்ற இந்த 10 ஆண்டுகளில் தமிழகம் மட்டுமல்லாமல் டெல்லி, ஆந்திரா, ஜார்க்கண்ட், கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் போன்ற என இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பல்வேறு மாநிலங்களில் பாஜ படுதோல்வி அடைந்துள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிற்கு தமிழகத்திலுள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளை மட்டும் காப்பாற்றும் பணி மட்டும் அல்ல, இந்தியா கூட்டணியை தூக்கி பிடித்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு இருக்கிறது. வெற்றி பெறும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு இந்தியாவின் பிரதமரை நியமிக்கின்ற சக்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.

இதில், தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இனியரசு, கோகுல கண்ணன், மலர்விழி குமார், ஆறுமுகம், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மூர்த்தி, விஸ்வநாதன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் யுவராஜ், கோல்ட் பிரகாஷ், மாநில மாவட்ட நிர்வாகிகள் சுகுமாரன், அன்பழகன், சுந்தரவரதன், ராமகிருஷ்ணன், சுபர்கான், பச்சையப்பன், ரவீந்திரன், பாஸ்கர்,

நாதன், பரிதி இளம் சுருதி, தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் குமார், பாபு, ஞானசேகரன், சேகர், சத்திய சாய், குமணன், கண்ணன், ஏழுமலை, சரவணன், சாலவாக்கம் குமார், வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மணி, நரேந்திரன், சண்முகம், குமார், கார்த்திக், இதயவர்மன், பையனூர் சேகர், ஆராமுதன், சந்தானம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். முடிவில், பகுதி செயலாளர் தசரதன் நன்றி கூறினார்.

The post `உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக்கூட்டம் ஒன்றிய அரசு நமது பண்பாட்டிலும், கல்வியிலும் கை வைத்துவிட்டது: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union government ,Minister AV ,Velu ,Kanchipuram ,Union BJP government ,``Stalin ,to ,Kanchipuram Theradi ,Dinakaran ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...