×

உலக நன்மைவேண்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், ‘பட்சி தீர்த்தம்’ என்றழைக்கப்படும், வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலில், மீண்டும் பட்சி வர வேண்டியும், உலக நன்மைக்காகவும் ஆண்டுதோறும் வேதகிரீஸ்வரருக்கு ‘வேதமலை பெருவிழா குழு’ சார்பில், 1008 பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, அகஸ்திய கிருபா அன்பு செழியன் தலைமையில் 1008 பால் குட ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் தாழக்கோயில் வளாகத்திலிருந்து பெண்கள் தங்கள் தலையில் பால் குடத்துடன் வேதகிரீஸ்வரர் மலை கோயிலுக்கு சென்று வேதகிரீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

The post உலக நன்மைவேண்டி வேதகிரீஸ்வரர் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Balkuta ,Vedakriswarar Temple ,Thirukkalukkunram ,Thirukkalukunram ,Vedakrisvara ,Patsi Theertha ,Vedagrisvara ,Patsi ,Agastya Krupa Anbu ,
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...