×

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரியும் நாய்கள்: பொதுமக்கள் அச்சம்

செங்கல்பட்டு: புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கு உள்ளிட்ட 4 மாடிகளிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம சுகாதார பேரவை சார்பில், கிராம சபா கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த சுகாதார பேரவை கிராம சபா கூட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த அலுவலர்கள் அரங்கிற்கு வந்தனர். அப்போது, நாய் ஒன்று அமர்ந்து கொண்டும் அங்கும் இங்கும் என சுற்றி திரிந்தது. இதனால், கூட்டரங்கிற்கு வந்தவர்கள் கூட்டம் நடக்கும் கூட்டரங்கிற்குள் செல்வதற்கு அச்சப்பட்டு அதன் காரணமாக தயங்கி தயங்கி நின்ற சம்பவம் அந்த அரங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாராவாரம் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் மனு கொடுக்க வருவார்கள்.

இதுபோன்று மக்கள் அதிகளவில் வரக்கூடிய நாட்களில் நாய்கள் வருவதால் நாயை கண்டு மனு அளிக்க கூட்டரங்கின் உள்ளே செல்ல அச்சப்பட்டு வருகின்றனர். புதிய கலெக்டர் அலுவலகம் கட்டி திறந்து பயன்பாட்டிற்கு வந்து ஒரு‌மாதமேயான நிலையில் அனைத்து அலுவலகங்களும் இங்கு செயல்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் 4 மாடிகளிலும் ‌தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றி திரியும் நாய்கள்: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu Collector's ,Chengalpattu ,Chengalpattu District Collector ,health board ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம...