×

திருப்போரூர் தொகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் இன்று அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்கிறார். தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை என்ற பெயரில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் விசிட் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு அண்ணாமலை வருகிறார். திருப்போரூர் பிரணவமலை நுழைவு வாயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ரவுண்டானா வரை ஊர்வலமாக செல்லும் அவர் அங்கு திறந்த வேனில் பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பாஜ தலைவர் மோகனராஜா செய்து வருகிறார்.

The post திருப்போரூர் தொகுதியில் அண்ணாமலை இன்று பாதயாத்திரை appeared first on Dinakaran.

Tags : Annamalai padayatra ,Tiruporur ,Tamil Nadu ,BJP ,president ,Annamalai ,Padayatra ,Tiruporur Assembly Constituency ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ