×

கேஒய்என் ஹூட் தொழில்நுட்பங்கள் நிறுவனம் சார்பில் புதிய ஹைப்பர் லோக்கல் சமூக வலைதளம் அறிமுகம்

சென்னை: சென்னையில் கேஒய்என் என்ற புதிய ஹைப்பர் லோக்கல் சமூக வலைதளம் கேஒய்என் ஹூட் தொழில்நுட்பங்கள் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேஒய்என் ஹூட் தொழில்நுட்பங்கள் நிறுவனம் கேஒய்என் (KYN) என்ற புதிய சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த செயலி குறித்து கைன்ஹூட் தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் (KYNHOOD TECHNOLOGIES) தலைமை அதிகாரி காயத்ரி தியாகராஜன் கூறியதாவது:

இந்தியாலின முதல் ஹைப்பர் லோக்கல் சமூக வலைதளமான கேஒய்என் (KYN) என்ற புதிய சமூக வலைதள செயலி வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி. இந்த செயலி தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக வலைதளம் என மூன்றின் கலவையாக இருக்கும். இப்போது சென்னையை களம் இறங்கி இருக்கிறோம். இந்த செயலியில் சென்னையை 14 மண்டலங்களாக பிரித்து உள்ளோம்.

மக்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் தளமாக நிச்சயம் இருக்கும். அதுமட்டுமில்லாமல், சிறு, குறு தொழில் முனைவோர், பெண் தொழில்முனைவோர் இல்லத்தரசிகள் தாங்கள் வாழும் பகுதிகளில் தங்களின் பொருட்களை/தயாரிப்புகளைச் சுலபமாக விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், பெரிய நிறுவனங்களும் தங்களை சுலபமாக ஹைப்பர் லோக்கல் சந்தையில் விளம்பரப்படுத்த கேஒய்என் (KYN) வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கேஒய்என் ஹூட் தொழில்நுட்பங்கள் நிறுவனம் சார்பில் புதிய ஹைப்பர் லோக்கல் சமூக வலைதளம் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : KYN Hood Technologies ,Chennai ,KYN ,minister ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...