×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவன் சாலையில் விழுந்ததால் பரபரப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பேருந்து பின்புற ஏணியின் மீது சிலர் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்து வந்தனர். இந்த நிலையில் பேருந்து படிக்கட்டில் சாகசம் செய்யும் விதமாக தொங்கியபடி பயணம் செய்து வந்த ஒரு கல்லூரி மாணவர் திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

மேலும் பேருந்தில் இருந்து இளைஞர் கீழே விழுந்ததை கூட பொருட்படுத்தாமல் பேருந்து ஓட்டுனர் பேருந்து தொடர்ந்து இயக்கியது மேலும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும் ஒரு சில கல்லூரி மாணவர்கள் சாகச வீரர்களாக தங்களை எண்ணிக்கொண்டு பேருந்துகளில் ஆபத்தான முறையில் படிகள் மற்றும் ஏணிகளில் தொங்கிய பயணம் செய்வது வருவதை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

பேருந்துகளில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கல்லூரி மாணவர்கள் காவல் துறையினரின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் சுய ஒழுக்கத்தோடு தங்களது எதிர்காலம் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடந்து கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.

The post ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவன் சாலையில் விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Ranipet district ,Ranipet ,Walaja ,Dinakaran ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...