×

விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன்: வீடியோ வெளியிட்டு போராட அழைப்பு

புதுடெல்லி: விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் வீடியோ வெளிட்டுள்ளான். ெடல்லியை நோக்கி விவசாயிகள் எல்லையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரியானா எல்லைக்கு உட்பட்ட 20 காவல் நிலைய பகுதியில் இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும்.

விவசாயிகள் பிரச்னை குறித்து ஒன்றிய அமைச்சர்கள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் காலிஸ்தான் தீவிரவாதி மற்றும் எஸ்எஃப்ஜே அமைப்பின் தலைவனான குர்பத்வந்த் சிங் பன்னூன் வெளியிட்ட வீடியோவில், ‘போராட்டக்காரர்களுக்கு எங்களது அமைப்பின் முழு ஆதரவு இருக்கும். பாகிஸ்தானின் கர்தார்பூர் சாஹிப் மற்றும் ராஜஸ்தானின் சர்வதேச எல்லைகளில் நீங்கள் போராடுவதற்கான ஆயுதங்கள் கிடைக்கும்.

பாகிஸ்தானிடம் இருந்து தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு எதிராக ஒரு தோட்டா வந்தாலும், நீங்களும் திருப்பிச் சுடவும்’ என்று வன்முறையை தூண்டும் வகையில் அந்த வீடியோவில் பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருவதால், அதனை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post விவசாயிகள் ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன்: வீடியோ வெளியிட்டு போராட அழைப்பு appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Edali ,Ariana ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு