×

மழைநீர் கால்வாய், குடிநீர் வசதி உள்ளகரம் 185வது வார்டு மக்கள் கோரிக்கை

ஆலந்தூர்: உள்ளகரம் 185வது வார்டில் உள்ள பல்வேறு தெருக்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழைநீர் கால்வாய், சாலை, குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் அப்பகுதி குடியிருப்பு
களில் மழைநீர் வெள்ளமாக புகுந்து வருகின்றன. இப்பகுதிகளில் உடனடியாக மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தருவதற்கு மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகராட்சி, பெருங்குடி 14வது மண்டலம், 185வது வார்டுக்கு உட்பட்ட உள்ளகரம் பகுதியில் அம்பேத்கர் தெரு, சிற்றரசு தெரு, அண்ணா தெரு, சோழன் தெரு, மகேஸ்வரி நகர், யூனியன் கார்பைடு காலனி போன்ற இடங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மழைநீர் கால்வாய் வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை. இதனால் மழைக்காலங்களின்போது இப்பகுதி குடியிருப்புகளில் மழைநீர் வெள்ளமாகப் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. பெருங்குடி மண்டலத்தின் பல்வேறு வார்டு பகுதிகளில் ஏராளமான வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 185வது வார்டில் மட்டும் மழைநீர் கால்வாய் வசதிகூட இதுவரை ஏற்படுத்தி தராதது அப்பகுதி மக்களை வேதனைப்படுத்தி வருகிறது.

மேலும், இந்த 185வது வார்டில் 20க்கும் மேற்பட்ட தெருக்களில் இதுவரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதேபோல் சாலை வசதி, பாதாள சாக்கடை, குடிநீர் உள்பட எண்ணற்ற வளர்ச்சி திட்டப் பணிகளில் 185வது வார்டின் பெரும்பாலான தெருக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை இப்பகுதி மக்கள் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, 185வது வார்டின் அனைத்து தெருக்களிலும் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை, சாலை வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை உடனடியாக மேற்கொண்டு, தரமாக அமைத்து தருவதற்கு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post மழைநீர் கால்வாய், குடிநீர் வசதி உள்ளகரம் 185வது வார்டு மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : 185th Ward ,Alandur ,Unalakaram Ward 185 ,Kararam 185th ,Dinakaran ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்