×

வெங்காயத்தாள் பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள் :

வெங்காயத்தாள் – 1 கட்டு
பாசிப்பருப்பு – 25 கிராம்
துவரம்பருப்பு – 50 கிராம்
சாம்பார் பொடி – அரை டேபிள் ஸ்பூன்
மஞ்சள்பொடி – சிறிதளவு
வெங்காயம் – 2
உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க :

கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – தேவைக்கேற்ப

செய்முறை :

வெங்காயத் தாளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகிய வற்றை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் வெங்காயத் தாளை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து அதில் வேக வைத்து உப்பு, மசித்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

 

The post வெங்காயத்தாள் பருப்பு கூட்டு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...