×

பத்திரிகையாளர்கள் மீது அவதூறு.. சந்தேகத்துக்கு இடமின்றி நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றம் நிரூபணம்: ஒரு மாதம் சிறை தண்டனை விதிப்பு!!

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த காவல்துறை இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் எஸ் வி சேகர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 15 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார். அபராதத் தொகை 15 ஆயிரம் ரூபாயை அவர் செலுத்திய நிலையில், மேலும் இந்த தண்டையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.சேகர் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மனு தாக்கல் செய்த நிலையில் அதற்கு ஏற்றவாறு தண்டனையை நிறுத்து வைப்பதாகவும் நீதிபதி ஜி.ஜெயவேல் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

The post பத்திரிகையாளர்கள் மீது அவதூறு.. சந்தேகத்துக்கு இடமின்றி நடிகர் எஸ்.வி.சேகர் மீதான குற்றம் நிரூபணம்: ஒரு மாதம் சிறை தண்டனை விதிப்பு!! appeared first on Dinakaran.

Tags : SV Shekhar ,Chennai ,Chennai Special Court ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...