×

அகழ்வாராய்ச்சிக்கென நாட்டிலேயே அதிக தொகை ஒதுக்கியுள்ள மாநிலமாக விளங்கும் தமிழகம்!!

சென்னை : அகழ்வாராய்ச்சிக்கென நாட்டிலேயே அதிக தொகை ஒதுக்கியுள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசிய பட்ஜெட்டில் உரையில், “தமிழகத்தில் 2024-25 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் கீழடி, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர். கிருஷ்ணகிரி மாவட்டம் . சென்னானூர் என மொத்தம் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், தமிழகம் மட்டுமின்றி பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச்சுவடுகளைத் தேடி கேரள மாநிலத்திலுள்ள முசிறி (பட்டணம்) ஒடிசா மாநிலத்திலுள் மாநிலத்திலுள்ள பாலூர், வெங்கி கர்நாடகத்திலுள்ள ஆந்திர மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். மேற்கூறிய பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.மேற்கூறிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அகழ்வாராய்ச்சிக்கென நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் இவ்வளவு அதிக நிதியை தமிழ்நாடு அரசுதான் தொடர்ந்து வழங்கி வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு கூறினார். மேலும் கீழடியில் ₹17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post அகழ்வாராய்ச்சிக்கென நாட்டிலேயே அதிக தொகை ஒதுக்கியுள்ள மாநிலமாக விளங்கும் தமிழகம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Sivagangai District Keezadi ,Virudhunagar District ,Vembakottai ,Polpanaikottai ,Pudukottai District ,Tiruvannamalai ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...