×

மனநலம் பாதிக்கப்பட்டவரெல்லாம் அதிகார பசியோடு அலைகிறார்கள்: பாஜ மீது நாஞ்சில் சம்பத் பாய்ச்சல்

காரைக்குடி: மனநலம் பாதிக்கப்பட்டர்கள் எல்லாம் இந்த நாட்டில் அதிகார பசியோடு அலைகிறார்கள் என்று பாரதிய ஜனதாவை திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தாக்கிப் பேசினார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் நடந்த கூட்டத்தில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:
ஒரு சரித்திர மாற்றம் சாத்தியமாக வேண்டுமானால் அது இளைஞர்களால் தான் முடியும். வரும் பொதுதேர்தல் என்ற குருஷேத்திரத்தில் வெள்ளாட்டின் தலையை காட்டி ஓநாயின் கறியை விற்பனை செய்யக்கூடியவர்கள் இவிஎம் மிஷினை காட்டி ஏமாற்ற நினைக்கிறார்கள். பள்ளிவாசல்களை குறிவைத்து சங் பரிவார் கும்பல் திட்டமிட்ட கலவரத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். அதிகாரத்தின் துணையுடன் அநியாயத்தை நிறைவேற்ற உள்ளனர். சுயேச்சையாக இயங்க கூடிய அமைப்புகளை எல்லாம் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

யாத்திரை நடத்தும் ராகுல்காந்தி முகத்தை பாருங்கள். அதிகாரத்தில் இருக்கும் மோடியின் முகத்தையும் பாருங்கள். மலர்ந்த மலர் போல் ராகுல்காந்தி உள்ளார். ஆனால் இஞ்சி தின்ற குரங்கை போல் இந்த நாட்டின் பிரதமர் உள்ளார். மோடி தோற்பதற்கான நேரம் வந்து விட்டது. அதிகார பசி அவரை அலைக்கழிக்கிறது. பாபர் மசூதியை உடைத்து நொறுக்கியவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்து சமாதானப்படுத்த நினைக்கின்றனர். ஒரே நாடு, ஒரே மொழி என இந்த தேசத்தை அடக்க நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என முதல்வர், பிரதமரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. குஜராத்தில் சிறு இடி இடித்தால் கூட உடனடியாக பார்வையிட்டு நிவாரணம் தருகிறார். தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பிரதமர் வரவில்லை.

திருச்சி, ரங்கம், ராமேஸ்வரம், அரிச்சல்முனைக்கு வரும் பிரதமர் ஆபத்து நிலையில் உள்ள மக்களை பார்க்க வரவில்லை. ஒரு தாய் மக்களாக இணைந்து வாழ்கிறோம். இதனை சீர்குலைக்க வருகின்றனர். ஒருவர் ‘என் மண் என் மக்கள்’ என கூறி கொண்டு வருகிறார். ஒரு ஊரில் அவருக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக கொடுத்தனர். அதற்கு சிவகாமி என பெயர் வைத்தார். அது கிடா என அண்ணாமலையிடம் கூறியும், நன்றாக சாப்பாடு கொடுங்கள் 3 குட்டி போடும் என கூறுகிறார். இப்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்த நாட்டில் அதிகார பசியோடு அலைகின்றனர்.இவ்வாறு அவர் ேபசினார்.

ஒரே நாடு, ஒரே மொழி என இந்த தேசத்தை அடக்க நினைக்கின்றனர். மோடி தோற்பதற்கான நேரம் வந்து விட்டது. அதிகார பசி அவரை அலைக்கழிக்கிறது.

The post மனநலம் பாதிக்கப்பட்டவரெல்லாம் அதிகார பசியோடு அலைகிறார்கள்: பாஜ மீது நாஞ்சில் சம்பத் பாய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Nanjil ,BJP ,Karaikudi ,Dravida ,Nanjil Sampath ,Bharatiya Janata Party ,Islamic Federation ,Sivagangai district ,
× RELATED முதல்வர் பதவிக்காக சசிகலாவை காட்டிக்...