×

பெங்களூரில் சென்ட் தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 3 தொழிலார்கள் உடல் கருகி உயிரிழப்பு..!!

பெங்களூரு: பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள சென்ட் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 3 தொழிலார்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பெங்களூரு ராமச்சந்திரா குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சென்ட் தயாரிப்பு தொழிற்சாலையில் தொழிலார்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்ததுடன் தீவிபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்த ரசாயனங்கள் வெடித்து சிதறி தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. ஆலையில் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள ஆலையை விட்டு ஓடினர். இன்னும் சிலர் ஆலைக்குள் சிக்கி கொண்டனர்.

தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஆலையில் இருந்த ரசாயனங்கள் சென்ட் பாட்டில்கள் குடோனில் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. 5 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெங்களூரில் சென்ட் தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து.. 3 தொழிலார்கள் உடல் கருகி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : St manufacturing plant ,Bangalore ,Sent ,manufacturing plant ,Bengaluru ,Sent manufacturing ,Ramachandra ,St production plant ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...