×

ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு.. மக்கள் தொகை அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு தயார்: முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். பீகாரில் கடந்த ஆண்டு ஜனவரி 7 முதல் அக்டோபர் 2 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பீகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் உள்ள பேரவை உறுப்பினர்களும் பேரவையில் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலம் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு தயார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளார்.

The post ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு.. மக்கள் தொகை அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு தயார்: முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Chief Minister ,Sambai Soren ,Sambai Soran ,Jatiwari ,Bihar ,Sadiwarik ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு; மாஜி...