×

திருவில்லிபுத்தூரில் கேந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

 

திருவில்லிபுத்தூர், பிப்.19: விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகள் தொழில் நகரமாக இருந்தாலும் திருவில்லிபுத்தூர் பகுதியில் சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிய தொழில் நிறுவனங்களோ, வர்த்தக நிறுவனங்களே ஏதும் இல்லை. விவசாயமே பிரதானமாக இருந்து வருகிறது. அதிலும் இடத்துக்கு இடம் குறிப்பிட்ட சில விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. செண்பகத்தோப்பு பகுதி என்றால் மா விவசாயம், பிள்ளையார்நத்தம் பகுதி என்றால் சின்ன வெங்காயம் மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் நெல் விவசாயம் என ஒவ்வொரு பகுதிகளிலும் தனித்தனியாக வெவ்வேறு விவசாயம் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பகுதியில் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் கேந்தி பூக்களை அதிகளவு பயிரிட்டுள்ளனர்.தற்போது திருவண்ணாமலை பகுதியில் கேந்தி பூக்கள் அதிக அளவு பூத்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினமும் அறுவடை செய்யும் அளவிற்கு பூக்கள் பூத்துள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பூக்கள் அதிகம் கிடைத்துள்ளது. கோயில் திருவிழாக்கள், பூக்குழி விழாக்கள் என வரிசையாக வர இருப்பதால் மாலைகள் கட்டுவதற்கு கேந்தி பூக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் கேந்தி பூக்கள் தேவை அதிகரிக்கும். எனவே ஓரளவு விலையும் கிடைக்கிறது என தெரிவித்தனர். இது ஒருபக்கம் இருந்தாலும் ஓசூரில் இருந்து வெள்ளை நிற கேந்தி பூக்களும் விற்பனைக்கு வருகின்றன. இந்த வெள்ளை நிற கேந்தி பூக்களை திருவில்லிபுத்தூர் பூ வியாபாரிகள் டியூப் லைட் பூக்கள் என அழைக்கின்றனர்.

The post திருவில்லிபுத்தூரில் கேந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Tiruvilliputhur ,Thiruvilliputhur ,Virudhunagar district ,Sivakasi ,Chatur ,Rajapalayam ,Arupukottai ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்