×

பழமையான நூலகத்தை சீரமைக்க கோரிக்கை

 

வத்தலக்குண்டு, பிப். 19: வத்தலக்குண்டுவில் உள்ள பழமையான நூலக கட்டிடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த நூலகம் தமிழின் 2வது நாவலான கமலாம்பாள் சரித்திரம் என்ற நூலை எழுதிய வத்தலக்குண்டுவை சேர்ந்த ராஜம் ஐயர், சாகித்திய அகாடமி விருது பெற்ற வத்தலக்குண்டுவைச் சேர்ந்த தமிழ் இலக்கியவாதிகள் பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா ஆகியோர் பயன்படுத்திய பெருமையுடையதாகும்.

இந்த நிலையில் தற்போது நூலகம் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், நூலக கட்டிடத்தை அதிகாரிகள் பார்வையிட்டு சீரமைக்க வேண்டும் என்று புத்தக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வாசகர்கள் கூறுகையில்,“நூலகத்தில் பழைய புத்தகங்கள் மட்டுமே உள்ளது. புதிதாக புத்தகங்கள் எதுவும் வரவில்லை. இதனால் படித்த புத்தகங்களையே திரும்ப படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே புதிய புத்தகங்களை வத்தலக்குண்டு நூலகத்திற்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெரும் இலக்கியவாதிகள் பயன்படுத்திய நூலக கட்டிடத்தை சீரமைத்து நவீனப் படுத்தினால் இளைய தலைமுறைக்கு பயனுள்ளதாக அமையும்’’ என்றனர்.

The post பழமையான நூலகத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vatthalakundu ,Rajam Iyer ,Wattalakundu ,Kamalampal Sarithram ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...