×

மண்டபம் முகாம் பகுதியில் தார்ச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மண்டபம்,பிப்.19: மண்டபம் முகாம் பகுதியில் இயங்கி வரும் தமிழர்கள் மறுவாழ்வு அலுவலகத்திற்கு செல்லும் தார்ச்சாலை மிகவும் குண்டும்,குழியுமாக சேதமடைத்து காணப்படுகிறது. மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட மண்டபம் முகாம் பகுதியில் தமிழர்கள் மறுவாழ்வு அலுவலகம் இயங்கி வருகிறது. இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகு மூலம் வருகை தரும் இலங்கை அகதிகளை மண்டபம் கேம்ப் தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்த அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மறுவாழ்வு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பராமரிப்புக்காக இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு முக்கிய பகுதியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த அலுவலகத்திற்கு ராமநாதபுரம்,ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை இருந்து குறுக்கு சாலையாக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதுபோல குழந்தைகள் நலமையம் மற்றும் அரசு இன்டேன் கேஸ் அலுவலகம் உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனால் இந்த தார்ச் சாலையை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மண்டபம் முகாம் பகுதியில் தார்ச்சாலையை சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Tamils Rehabilitation Office ,Sri Lanka ,India ,Dinakaran ,
× RELATED கடலில் வீசப்பட்ட ரூ.5 கோடி தங்கம் மீட்பு