×
Saravana Stores

இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டை பறிமுதல்

 

மண்டபம்,ஜூலை 14: மண்டபம் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு செல்லப்பட்ட கடல் அட்டையை போலீசார் கைப்பற்றி, வாலிபரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வாகனத்தில் கடத்தல் பொருள் செல்வதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மண்டபம் முதல் சுந்தரமுடையான் பேருத்து நிறுத்தம் பகுதி வரை நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வேதாளை பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை 50 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும். போலீசார் கடல் அட்டையை பறிமுதல் செய்து, கார் ஓட்டுநர் மண்டபம் அருகே மரைக்காயர் பட்டிணம் சுல்தான் மகன் சாகுல் ஹமீது(37) என்பவரை கைது செய்தனர். பின்னர் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தியதில், வேதாளை கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு கடத்த கடல் அட்டையை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

The post இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டை பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Mandapam ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை