×

வேலை வாங்கித்தருவதாக ரூ.13.40 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு

 

பேரையூர், பிப். 19: பேரையூரில் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி, ரூ.13.40 லட்சம் மோசடி செய்ததாக மதுரையை சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். பேரையூர் திருமால் நகரைச் சேர்ந்தவர் அங்குராஜ் (55). இவர் பேரையூரில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகனுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டும் என, மதுரை, சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சீனி மகன் முத்துக்குமார் (45) என்பவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அங்குராஜ் ரூ.13.40 லட்சத்தை 2019ம் ஆண்டு முத்துக்குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரது மனைவி தமிழ்ச்செல்வி(40), உசிலம்பட்டி சுப்பிரமணி மகன் எபினேசர் (55), சந்தையூர் ரத்தினசபாபதி (60 ஆகியோரும் இருந்துள்ளனர். ஆனால், அவரது மகனுக்கு வேலை வாங்கித்தராத முத்துக்குமார் பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதற்கிடையே முத்துக்குமார் அவரது பணம் இல்லாத வங்கி கணக்கில் இருந்து காசோலையை கொடுத்து ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து அங்குராஜ் கொடுத்த புகாரின் பேரில் முத்துக்குமார், தமிழ்ச்செல்வி, எபினேசர், ரத்னசபாபதி ஆகிய 4 பேர்கள் மீதும் பேரையூர் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வேலை வாங்கித்தருவதாக ரூ.13.40 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Peraiyur ,Madurai ,Beraiur ,Anguraj ,Peraiyur Thirumal ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை