- போலீஸ் அணிவகுப்பு பயிற்சி
- தூத்துக்குடி
- தூத்துக்குடி
- சமாஜ்வாடி
- பாலாஜி சரவணன்
- தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசார்
- தூத்துக்குடி ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு பயிற்சி
- தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி
- ஆயுதப்படை போலீஸ்
தூத்துக்குடி,: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சியை எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முக்கிய அறிவுரை வழங்கினார். தூத்துக்குடி ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் மைதானத்தில் நடந்தது. இந்த கவாத்து பயிற்சியை தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆயுதப்படை போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி புருஷோத்தமன், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ராணி, எஸ்ஐக்கள் வெங்கடேஷ், சங்கரலிங்கம் மற்றும் சக்திவேல் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசாரின் கவாத்து பயிற்சி appeared first on Dinakaran.