×

மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்க முகாம்

சேந்தமங்கலம்: கொல்லிமலை வட்டார பகுதியில், மின்னணு வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு செயல் விளக்கம் முகாம் நடந்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு குறித்த செயல்முறை விளக்க முகாம், ஒவ்வொரு ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களுக்கு வாகன மின்னணு வாக்கு இயந்திரத்தை நேரில் கொண்டு சென்று, அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு செயல் விளக்கம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொல்லிமலை ஒன்றியம் பைல்நாடு ஊராட்சியில் உள்ள அடிவர பகுதியான கீழ் செங்காடு, ஆலவாடி, சின்னகளிச்சிபாறை ஆகிய 3 கிராமங்களில் நடைபெற்றது.

The post மின்னணு வாக்குப்பதிவு செயல் விளக்க முகாம் appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kollimalai ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...