×

அயோத்தி கோயிலுக்கு 800 பக்தர்கள் பயணம்

ஓசூர்: ஓசூரில் இருந்து பாஜ கட்சி சார்பில், ஓசூர் ரயில் நிலையத்திலிருந்து 800 பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு நான்காம் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை ஓசூர், தளி, வேப்பனபள்ளியை சேர்ந்த சுமார் 3400 பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதை தொடர்ந்து, நேற்று 4ம் கட்டமாக ஓசூர் பகுதியைச் சேர்ந்த 800 பக்தர்களை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் ஸ்ரீனிவாசன், மாநில பட்டியல் அணி துணை தலைவர் கஸ்துரி, மாவட்ட நிர்வாகிகள் முருகன், ஸ்வேதா, பிரவீன்குமார், அணி பிரிவு நிர்வாகிகள் ராமலிங்கம், போத்திராஜ், கருணாநிதி, மஞ்சுளா, முரளி, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post அயோத்தி கோயிலுக்கு 800 பக்தர்கள் பயணம் appeared first on Dinakaran.

Tags : Ayodhya temple ,Hosur ,BJP ,Ayodhya Ram Temple ,Thali ,Vepanapalli ,Ayodhya Ram Temple.… ,
× RELATED பாஜவுக்கு மறைமுக ஆதரவு; கர்நாடகா...