×

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருத்தரங்கம்

 

திருப்பூர், பிப். 19: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடப்பு ஆண்டிற்கான பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் முதல் நாள் நடந்த நிகழ்ச்சியை தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் புவனேசுவரி தொடங்கி வைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நிகழ்த்திய செம்மொழி செயல்பாடுகள் என்ற தலைப்பில் சிந்தனை கவிஞர் கவிதாசன் சிறப்புரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணைகள் என்ற தலைப்பில் மணிகேமலை, கணினி தமிழ் என்ற தலைப்பில் குணசீலன், மொழிமெயர்ப்பு கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் மணிவண்ணன், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் பாலசுப்ரமணியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

2வது நாள் நடந்த விழாவில் ஆட்சிமொழி ஆய்வு, குறைகளவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் சந்திரா, ஆட்சிமொழி சட்டம் வரலாறு என்ற தலைப்பில் வக்கீல் உமர்கயான், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் என்ற தலைப்பில் பாமுருகு ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் சமுதாய சிந்தனைகள் என்ற தலைப்பில் அனிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் 2021ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட நிலை அலுலமாக தெரிவு செய்யப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்திற்கான கேடயம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Development Department ,Tirupur ,District ,Collector ,Kristaraj ,
× RELATED ஆவின் பாலகத்தில் இருந்த ஆங்கில பெயர் பலகை தமிழில் மாற்றம்