×

குமரலிங்கம் பகுதியில் கன்றுகளுக்கு நோய் தடுப்பூசி

 

உடுமலை, பிப். 19: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி (புருசில்லாசிஸ்) செலுத்தும் மூன்றாம் கட்ட முகாம் குமரலிங்கம் அருகே உள்ள ரைஸ்மில் கிராமத்தில் நடந்தது. குமரலிங்கம் பேரூராட்சி தலைவர் ஷர்மிளா பானு, துணைத்தலைவர் அழகர்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.

உடுமலை கோட்ட உதவி இயக்குநர் ஜெயராமன் தலைமையில் குமரலிங்கம் கால்நடை மருத்துவர் கார்த்திகேயன், துங்காவி கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், கால்நடை ஆய்வாளர்கள் கார்த்தி, பத்மா, பராமரிப்பு உதவியாளர்கள் காந்திஜெயா, ராஜேந்திரன் ஆகியோர் மூலம் கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதுபற்றி கால்நடை துறையினர் கூறுகையில், “இந்த தடுப்பூசி மூலம் கிடாரி கன்றுகளை கருச்சிதைவில் இருந்து பாதுகாக்க முடியும். இந்த முகாம் உடுமலை கோட்டம் முழுவதும் மார்ச் 15ம் தேதி வரை நடைபெறும். எனவே, கால்நடை வளர்ப்போர் தங்களது கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றனர்.

The post குமரலிங்கம் பகுதியில் கன்றுகளுக்கு நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Tags : Kumaralingam ,Udumalai ,Ricemill ,Tamil Nadu Government Animal Husbandry Department ,Kumaralingam Municipality ,President ,Sharmila Bhanu ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு