×

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு

 

திருப்பூர், பிப்.19: திருப்பூர் அவினாசி ரோடு, அம்மாபாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் ராஜராஜன். இவர் அம்மாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே கிளினீக் நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஹிப்னோ ஆழ்மன சிகிச்சையை வழங்கி வருகிறார். மேலும் மனம் மயக்கும் கலை, மனதோடு பேசலாம், ஆழ்மனதின் அற்புத சக்திகள், பயம்-தூக்கம், ஆழ்மன நோய்களும், அற்புதமான சிகிச்சையும் உள்பட ஏராளமான உளவியல் மருத்துவ சிகிச்சை சார்ந்த ஏராளமான புத்தகங்களை எழுதி உள்ளார்.

இந்த நிலையில் டாக்டர் ராஜராஜன் எழுதிய ஆழ்மன நோய்களும், அற்புதமான சிகிச்சையும் என்ற புத்தகம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் பரிசு பெற தேர்வு ஆனது. இதையடுத்து சென்னை அண்ணா நூலகம் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் 2020-21ம் ஆண்டுகளின் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

இதில் டாக்டர் ராஜராஜன் எழுதிய ஆழ்மன நோய்களும், அற்புதமான சிகிச்சையும் என்ற புத்தகத்தை வெளியிட்ட ரா.ரா.பதிப்பிற்கு பாராட்டு சான்றிதழும், பரிசாக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் டாக்டர் ராஜராஜனிடம் வழங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சிறந்த நூல்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Tamil Development Department ,Tirupur ,Dr. ,Rajarajan ,Ammappalayam, Avinasi Road, Tirupur ,Ammapalayam ,
× RELATED பாவேந்தரின் 133வது பிறந்த நாள்...