×

உறைபனி, வெயில் தாக்கம் அதிகரிப்பு செடி, கொடிகள் காய்ந்து கருகி வருவதால் காட்டு தீ அபாயம்

 

ஊட்டி, பிப்.19: கடும் உறைபனி, பகல் நேரங்களில் வெயில் அதிகளவு காணப்படுவதால் நீலகிாி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் செடி, கொடிகள் காய துவங்கியுள்ளது. இதனால், காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இருந்து உறைபனி பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் உறைப்பனி கொட்டிக் கிடக்கிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. தற்போது விழும் உறைபனியால் வனப்பகுதிகளும் கருகி, காயத்துவங்கியுள்ளன.

முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட அப்பர்பவானி, கோரக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் புற்கள், செடி கொடிகள் மற்றும் மரங்கள் கருகி காய்ந்து வருகின்றன. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள விலங்கினங்கள் உணவு தேடி இடம் பெயர துவங்கியுள்ளன.
பனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வனங்கள் காய்ந்து வருவதால் காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. தீ தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் முதுமலையில் கவுண்டர் பயர் முறையில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

காட்டு தீ ஏற்படாத வகையில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்து மே மாதம் வரை கடுமையான வெயில் காலம் என்பதால் வனத்தை ஒட்டிய சாலைகள் வழியாக பயணிக்க கூடிய பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் தீ மூட்டி உணவு சமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

The post உறைபனி, வெயில் தாக்கம் அதிகரிப்பு செடி, கொடிகள் காய்ந்து கருகி வருவதால் காட்டு தீ அபாயம் appeared first on Dinakaran.

Tags : Nilgai district ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED காய்ந்த புற்களை தீயில் எாிப்பு-சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு