×

சிறுவனை கடத்தி தாக்கிய 6 பேர் அதிரடி கைது

 

புதுச்சேரி, பிப். 19: புதுச்சேரி உருளையன்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது 15 வயது மகன் கடந்த 16ம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் சிறுவனை தாக்க முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து சிறுவன் தப்பித்து ஓடி உள்ளார். அந்த கும்பல் அவரை விடாமல், துரத்திச் சென்று தாக்கியது. பின்னர், இருசக்கர வாகனத்தில் சிறுவனை கடத்தி சென்று, லெனின் வீதி திருமால் நகரில் வைத்து சரமாரியாக தாக்கியது.

மேலும், சிறுவனின் தலையில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் பலத்த காமடைந்த சிறுவனை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவனுக்கும், டிஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ் (23) தரப்புக்கும் இடையே யார் பெரியவர்? என்பதில் பிரச்னை இருந்து வந்துள்ளது.

3 நாட்களுக்கு முன்பு சிறுவன், அங்குள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சந்தோஷ் தரப்பினருக்கும், சிறுவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சந்தோஷ் தரப்பினர் சிறுவனை தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி வீட்டு வாசலில் சிறுவன் தனியாக இருப்பதை அறிந்து, சந்தோஷ் தரப்பை சேர்ந்த 9 பேர் கொண்ட கும்பல் சிறுவனை மிரட்ட வந்துள்ளனர்.

அவர்கள் தன்னை தாக்க வருகிறார்கள் என நினைத்து, அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக சிறுவன் ஓடியுள்ளார். இருப்பினும், அந்த கும்பல் சிறுவனை துரத்தி சென்று தாக்கியுள்ளது. பிறகு, சிறுவனை கடத்தி சென்று கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதையடுத்து, இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் சிறுவன் ஆவார். மேலும், 3 பேரை தேடி வருகின்றனர்.

The post சிறுவனை கடத்தி தாக்கிய 6 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Urulayanpet ,Muthamil ,
× RELATED மருத்துவ மாணவர் மாயம்