×

ஈரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

 

ஈரோடு,பிப்.19:ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஈபிபி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியை தமிழ்செல்வி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் பங்கேற்று வாழ்த்தி பேசினார். தொடர்ந்து, மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

இதையடுத்து பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், தேசிய அளவிலான எரிபந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்கள் கவின்,ரக்சித் இருவரும் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில்,பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் வினோத்குமார், பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள்,பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Erode Panchayat Union Middle School Annual Festival ,Erode ,Panchayat Union Middle School ,EPP Nagar ,Erode Corporation ,Tamilselvi ,Viswanathan ,Parents Teachers Association ,Deputy Corporation ,Erode Panchayat Union Middle School Annual Ceremony ,Dinakaran ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...